கோவை மாவட்டம் நெகமம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாற்றுகிறார். இவருக்கு திருப்பூர் தாராபுரம் சாலை சேரன் தொழிலாளர் காலனியில் உள்ள வீட்டை பழனியப்பன், சரோஜினி தம்பதியருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இதில், 2016ஆம் ஆண்டு அந்த வீட்டை விற்பனை செய்வதாகக் கூறி 14 லட்ச ரூபாய் முன்பணம் பெற்று மீதி பணம் கொடுத்ததும் பத்திரப்பதிவு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மீதி பணத்தை பெற்று பத்திரப்பதிவு செய்வதைத் தவிர்த்து வந்த சுப்பிரமணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாராபுரம் வட்டமலை புதூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவருக்கு வீட்டினை விற்பனை செய்துள்ளார்.
இதனையடுத்து, இது குறித்து அறிந்த பழனியப்பன் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். இருந்தபோதும் வீட்டை விலைக்கு வாங்கிய சிதம்பரம் 50க்கும் மேற்பட்டோருடன் அத்துமீறி நுழைந்து பொருட்களை சாலையில் வீசி எரிந்துள்ளனர். இது தொடர்பாக சரோஜினி ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.