ETV Bharat / state

அமமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் - காவல்துறையினர் விசாரணை

author img

By

Published : Oct 29, 2020, 10:48 AM IST

கன்னியாகுமரி: வடசேரி பேருந்து நிலையத்தில் அமமுக பிரமுகர் மீது அடையாளம் தெரியாத கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kanniyakumari latest news kanniyakumari latest news
kanniyakumari latest news

கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி மேலகலுங்கடியைச் சேர்ந்தவர் அசோக் (27). அமமுக பிரமுகரான இவர், எட்டு ஆண்டுகளுக்கு முன் இசைவாணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று (அக்.28) இரவு வடசேரி பேருந்து நிலையத்தில் அசோக் நின்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத ஒரு கும்பல் கத்தியால் குத்தி அவரை சரமாரியாக தாக்குதல் நடத்தியது.

இதில், ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், இது குறித்து வடசேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், உறவினர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூலிப்படையை ஏவி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, நாங்குநேரியைச் சேர்ந்த சுரேஷ் உள்பட ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பலத்த மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.