அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (ஆகஸ்ட் 5) நடைபெறவுள்ளது. இதற்காக உலகம் முழுவதும் இருந்து பல புண்ணிய தீர்த்தங்கள், கோயில்களில் இருந்து புனிதநீர் மற்றும் புனிதமண் கொண்டுச் செல்லும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுச் செல்லும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், ஆன்மிக தலைவர்கள், மடாதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
குழித்துறை மகாதேவர் ஆலய படித்துறையில் நடந்த சிறப்பு பூஜைகளை தொடர்ந்து புனித நீர் மற்றும் புனித மண் கலசங்களில் அடைத்து சென்னைக்கு அனுப்பப்பட்டன. சென்னையிலிருந்து நாளை விமானம் மூலம் இந்த கலசமானது அயோத்தியைச் சென்றடையும். அயோத்தியில் 41 நாட்கள் நடக்கும் பூஜைகளில் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது. இதில், விஷ்வ இந்து பரிஷத் பூசாரிகள் பேரவை உள்பட பல்வேறு இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் கட்டமைப்பு!