கன்னியாகுமரி மாவட்ட இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான திருக்கோயில்களின் அலுவலகம் சுசீந்திரத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில்களுக்கான அறங்காவலர் குழு தேர்வு இன்று நடைபெற்றது. இதன் பொறுப்பாளர்களாக ஜெயச்சந்திரன், அழகேசன், பாக்கியலெட்சுமி மற்றும் சதாசிவம் ஆகியோர் அறங்காவலர் குழுத்தலைவர் சிவகுற்றாலம் தலைமையில் பதிவி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நட்சத்திர பேச்சாளரும் திரைப்பட இயக்குநருமான நாஞ்சில் அன்பழகன், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்ஏ அசோகன், குமரி மேற்கு மாவட்டச் செயலாளர் ஜாண்தங்கம், ஒன்றியச் செயலாளர்கள் கிருஷ்ணகுமார், அழகேசன், தாமரை தினேஷ், சுந்தர்சிங், பாலமுருகன் உட்பட ஏராளமான அதிமுகவினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மருதூர் ஏழை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்!