இந்தியா - சீனா எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 16ஆம் தேதி சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சீனாவின் தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், சீன பொருள்களை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சீன உற்பத்தி பொருள்களை சாலையில் எறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.