ETV Bharat / state

கன்னியாகுமரியில் இரவு முழுவதும் கனமழை - kanyakumari

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கன்னியாகுமரியில் விடிய விடிய கனமழை
author img

By

Published : Jul 5, 2019, 2:50 PM IST

தமிழ்நாடு, கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தென் மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு உரிய நேரத்தில் பருவமழை பெய்யாததால் விவாசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், சுசீந்தரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கொட்டாரம் பகுதியில் 62.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இதனால் பேச்சிபாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு 394 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதேபோல 627 கன அடி தண்ணீர் அணையில் இருந்து விவசாயத்துக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழையும் மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொட்டாரம் பகுதியில் 62.4 மி .மீ மழை பதிவாகி உள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Body:தமிழகம் மற்றும் கேரளாவிலும் தென் மேற்கு பருவ மழையை விவசாயிகள் நம்பி இருந்தனர். ஆனால் உரிய நேரத்தில் பருவமழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது.
இந்தநிலையில் நேற்று இரவு நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், சுசீந்தரம், கொட்டாரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது. நேற்று இரவு ஆரம்பித்து விடிய விடிய மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழையும் மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்தது. குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கொட்டாரம் பகுதியில் 62.4 மி .மீ மழை பதிவாகி உள்ளது.
இதனால் பேச்சிபாறை, பெருஞ்சாணி உள்ளிடத் முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அனையின் நீர்மட்டம் தற்போது 10.30 அடியாக உள்ளது.
மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு 394 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 627 கன அடி தண்ணீர் அணையிலிருந்து விவசாயத்திகாக வெளியேற்றம் செய்யபட்டு வருகிறது. Conclusion:குமரியில் தொடர்ந்து மழை பெய்தால் அணைகளின் மட்டம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால் குமரி மாவட்ட விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.