தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்தது. முக்கியமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. இதன் எதிரொலியாக பகல் மட்டுமல்லாது இரவு நேரங்களிலும் கடுமையான வெப்பம் நிலவியது.
இந்நிலையில் நாகர்கோவில், தாழாக்குடி, இறச்சிகுளம், பூதப்பாண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளுமையான சூழல் ஏற்பட்டதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.