கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருக்கும் பொதுமக்களுக்கு இந்த வெப்பத்தின் தாக்கம் புழுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் குளிர்பானங்கள், பழங்களின் விற்பனையும் சூடு பிடித்திருந்தது.
இந்நிலையில், இன்று மாவட்டம் முழுவதும் மதியம் முதல் மாலை வரை கனமழை பெய்தது. குறிப்பாக மலையோர பகுதிகளிலும் நாகர்கோவில், கோட்டார், வடசேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதையும் படிங்க: கண்டெய்னரில் சொந்த ஊருக்கு திரும்ப முயன்ற 26 வட மாநில இளைஞர்கள்!