கன்னியாகுமரிக்கு இன்று குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, அவரை வறவேற்பதற்க்காக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வந்திருந்தார். பின்னர், உலக புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலுக்கு இன்று ஆளுநர் சென்று சாமி தரிசனம் செய்தார்.
மேலும், சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் நடைபெற்ற ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டார். அங்கு அவருக்கு இந்து அறநிலையத் துறை சார்பாக, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி உள்ளிட்ட பணியாளர்கள் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பளித்தனர்.
இதையும் படிங்க: 'மகாகவி பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர்' - தமிழில் பேசி அசத்திய ஆளுநர்!