ETV Bharat / state

அரசை அதலபாதாள நஷ்டத்திற்கு தள்ளிய கன்னியாகுமரி அரசு ரப்பர் கழகம்

author img

By

Published : Jun 6, 2019, 3:03 PM IST

கன்னியாகுமரி: அரசு ரப்பர் கழகத்தின் உயர் அலுவலர்கள் அலட்சியமாக செயல்பட்டதால் பல கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரப்பர் கழகம்

நம் நாட்டிற்கு அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் தொழில்களில் ரப்பர் உற்பத்தி முக்கிய பங்கு வகுக்கிறது. அந்தவகையில் ரப்பர் தொழிலை பொறுத்தவரை கேரளாவிற்கு அடுத்த படியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தடிக்காரன்கோணம், மாரமலை என மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் ஹேக்டேரில் தனியார் நிறுவனங்கள் ரப்பர் விவசாயம் செய்துவருகின்றனர்.

இதில், அரசு ரப்பர் கழகம் சார்பில் ஐந்தாயிரம் ஹேக்டேரில் ரப்பர் விவசாயம் செய்யப்படுகிறது. கீரிப்பாறை, மணலோடை, சிற்றார், மயிலாறு, கோதையாறு என ஐந்து கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ரப்பர் மரங்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன.

இந்தக் கோட்டங்களின் மரங்களிலிருந்து தினசரி எடுக்கப்படும் ரப்பர் பந்துகளை கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு தரம் பிரிக்கப்பட்டு மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் உள்ள ரப்பர் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கபடுகின்றன.

இந்நிலையில், கடந்த முறை அனுப்பப்பட்ட 112 பேரல் ரப்பல் பந்துகள் காலாவதியாகி கெட்டு போனதாகக் கூறி தனியார் நிறுவனங்கள் ரப்பர் பந்துகளை கீரிப்பாறையில் உள்ள அரசு ரப்பர் கழகத்திற்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளனர்.

அதள பாதாள நஷ்டத்திற்கு தள்ளப்படும் ரப்பர் கழகம்

இது குறித்து ரப்பர் கழக ஊழியர் ஒருவர் கூறும்போது, ‘காலாவதியாகி அனுப்பப்பட்ட 112 ரப்பர் பந்துகளால் அரசுக்கு ரூ.25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் பல பேரல் ரப்பர் பந்துகள் உரிய அலுவலர்கள் இல்லாமல் காலம் தாழ்த்தி பதப்பட்டு நஷ்டமடைந்துள்ளன.

இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மெத்தனமாக நடந்துகொண்ட கன்னியாகுமரி அரசு ரப்பர் கழக உயர் அலுவலர்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் போராட்டம் வெடிக்கும்’ என ஆவேசமாகக் கூறினார்.

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.