கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ். இவர் கோட்டார் காவல் நிலையம் அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கயிறு சாக்கு விற்பனை செய்யும் குடோன் நடத்திவருகிறார். இவர் சமீபத்தில் குடோனின் ஒரு பகுதியை அலுவலகமாக மாற்றினார். இங்கு சில சாக்கு கட்டுகளும், கணினி, ஆவணங்கள் உள்ளிட்ட அலுவலகப் பொருள்களும் இருந்தன.
இந்நிலையில் இன்று (ஜூன் 24) காலை இந்தக் குடோனிலிருந்து கடுமையான புகை வர ஆரம்பித்ததுள்ளது. இதனையடுத்து இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் குடோனில் ஏற்பட்டிருந்த தீயைப் போராடி அணைத்தனர்.
![குமரி சாக்கு குடோனில் தீ விபத்து!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-knk-01-godown-fire-visual-7203868_24062020103953_2406f_1592975393_519.jpg)
இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் அலுவலகத்திலிருந்த சாக்கு கட்டுகள், கணினி உள்ளிட்ட அலுவலகப் பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இதையும் படிங்க...காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - ஜெயராஜ் மனைவி புகார்