ETV Bharat / state

’ஆதாரத்த கொடுங்க...’ இளம்பெண் உள்ளிருப்பு போராட்டம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம், குற்றப்பிரிவு டிஎஸ்பி, பாலியல் புகார்

கன்னியாகுமரி: நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

’ஆதாரத்த கொடுங்க...’  இளம்பெண் உள்ளிருப்பு போராட்டம்

author img

By

Published : Mar 1, 2021, 8:47 AM IST

களியக்காவிளை அருகே மேக்கொடு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்பின். இவர் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் களியக்காவிளையில் செல்போன் கடையில் பணியாற்றினேன். கடை உரிமையாளர் ஆசைக்கு உடன்படவில்லை என்பதால், என் மீது திருட்டு புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் என்னை கைது செய்தனர்.

நான் சிறையில் இருந்தபோது காவலர்கள் என்னை விசாரணைக்கு அழைத்ததாகவும், பலர் மீது நான் பாலியல் புகார்கள் கூறுவதாகவும், இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் என நான் எழுதிக் கொடுத்ததாக ஒரு ஆவணம் தயார் செய்துள்ளனர்.

இந்நிலையில் எனது ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவர் வழக்கிற்கு உதவுவதாக கூறினார். ஒரே வீட்டில் தங்கியிருந்த என்னிடம் அவர் அத்துமீறினார். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அப்போது வழக்கை விசாரித்த எஸ்ஐ, அவர் தங்கியிருந்த குடியிருப்பில் என்னை தங்க வைத்தார்.

அப்போது, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னை கர்ப்பிணி ஆக்கினார். நான் கர்ப்பம் தரித்ததை அறிந்ததும் முறையான மருத்துவம் பயிலாதவர் மூலம் எனது கருவை கலைத்தார். இதுபற்றி செய்திகள் வெளியாகின.

’ஆதாரத்த கொடுங்க...’ இளம்பெண் உள்ளிருப்பு போராட்டம்

இதற்கிடையே மற்றொருவர் எனக்கு உதவி செய்வதாக ரூ.60,000 பணத்தை அபகரித்தார். இது பற்றி தக்கலை டிஎஸ்பி அலுவலகத்தில் புகாரளிக்க முயன்றபோது காவலர்கள் என்னை தாக்க முயன்றனர். மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில், நான் பலருடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் வழக்கை திசை திருப்ப முயல்வதாகவும் கூறியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி நான் பலருடன் தொடர்பு வைத்திருந்ததற்கு ஆதாரம் அளிக்கும்படி மூன்று முறை கேட்டேன். இதுவரை தகவல் தரவில்லை. எனவே குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆஜராகி நான் யாருடன் தொடர்பு வைத்திருந்தேன் என்பதற்கான ஆதாரத்தை தெரிவிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : சபாநாயகர் பதவியைத் துறந்தார் சிவக்கொழுந்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.