ETV Bharat / state

சிறுமியை ஏமாற்றி வன்புணர்வு செய்த வாலிபர்!

கன்னியாகுமரி: 15 வயது சிறுமியை திருமணம் செய்து வீட்டில் அடைத்து வைத்து வன்புணர்வு செய்த வாலிபரை போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

வன்புணர்வு
author img

By

Published : Jul 11, 2019, 9:23 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூரைச் சேர்ந்த தம்பதியின் 15 வயது மகள் அந்த பகுதியில் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்குச் சென்று வரும்போது பக்கத்து ஊரான நெடுவிளையை சேர்ந்த செல்வராஜா மகன் தபின் அறிமுகமாகி உள்ளார். அவருக்கு 20 வயதாகிறது.

அவர் தொடர்ந்து சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியும் சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தபின் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதால் மாணவி அவரை காதலித்துள்ளார். இந்நிலையில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி தபினுடன் சிறுமி சென்றதால் பெற்றோர்கள் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

சிறுமியை அழைத்துச் சென்ற தபின் ஒரு கோயிலில் வைத்து அவரை திருமணம் செய்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார் . தபின் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகக் குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்படி அவர்கள் நேற்று நெடுவிளையில் தபின் வசித்து வந்த வீட்டுக்குச் சென்று பார்த்த போது அங்கு தபின் இல்லை. சிறுமி மட்டுமே இருந்தால் அவரை மீட்டு கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல்துறை நடத்திய விசாரணையில் சிறுமிக்குத் திருமண வயது ஆகவில்லை என்பதும் தபின் ஆசை வார்த்தை கூறி அவரை ஏமாற்றி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கன்னியாகுமரி காவல்துறை போக்சோ பிரிவின் மீது வழக்குப் பதிவு செய்து தபினை தேடி வருகின்றனர். மேலும், சிறுமியைக் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Intro:கன்னியாகுமரி அருகே 15 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம். வாலிபர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு.

Body:கன்னியாகுமரி அருகே 15 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம். வாலிபர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர் .இவர்களின் 15 வயது மகள் அந்த பகுதியில் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு சென்று வரும்போது அதை அடுத்த ஊர் நெடுவிளையை சேர்ந்த செல்வராஜா மகன் தபின் வயது 20 என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர் தொடர்ந்து மாணவியிடம் தன்னை காதலிக்க மாறு வற்புறுத்தி வந்தார். ஆனால் மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தபின் மாணவியிடம் தான் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார். அவரது பேச்சை நம்பிய மாணவி வாலிபரை காதலிக்க தொடங்கினார். இதற்கிடையே கடந்த மே மாதம் 22-ஆம் தேதி தபினுடன் மாணவி சென்றுவிட்டார். மகளை காணாமல் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர் .ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாணவியை அழைத்து சென்ற தபின் ஒரு கோவிலில் வைத்து அவரை திருமணம் செய்தபின் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டு வீட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் தபின் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்திருக்கும் தகவல் குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் நேற்று நெடுவிளையில் தபின் வசித்து வந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு தபின் இல்லை. சிறுமி மட்டுமே இருந்தால் அவரை மீட்டு கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு திருமண வயது ஆகவில்லை என்பதும் தபின் ஆசை வார்த்தை கூறி அவரை ஏமாற்றி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதை அடுத்து கன்னியாகுமரி போலீசார் போக்சோ பிரிவின் மீது வழக்கு பதிவு செய்து தபினை தேடி வருகின்றனர் .தொடர்ந்து சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.