ETV Bharat / state

மாவட்டம் முழுவதும் 60 மையங்கள் அமைத்து ஊரடங்கு கண்காணிப்பு - குமரி எஸ்.பி. பேட்டி! - full lockddown news

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கரோனா தளர்வுகளற்ற முழு ஊரடங்கு குறித்தும், எல்லைப் பகுதிகளில் 20 மையங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 60 மையங்கள் அமைத்தது குறித்தும் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பேட்டி அளித்தார்.

காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பேட்டி

author img

By

Published : May 24, 2021, 8:22 PM IST

கரோனா முழு ஊரடங்கை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று (மே.24) நாகர்கோவில் வடசேரி பகுதியில் தடை உத்தரவு செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது, 'கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவ காரணங்களுக்காகச் செல்பவர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு வீடு வீடாக காய்கறிகள், மீன்கள் சென்று வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகளில் 20 மையங்களிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் 40 மையங்களும் ஆக மொத்தம் 60 மையங்களில் காவல் துறையினர் கண்காணிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர 25 இரு சக்கர வாகன காவல் துறையினர் ரோந்தும், 20 நான்கு சக்கர வாகன காவல் துறையினர் ரோந்துப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பேட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை பொதுமக்கள் இந்த முழு ஊரடங்கிற்கு முழு ஆதரவு தந்து வருகின்றனர். தொடர்ந்து இதே போன்ற ஆதரவு அளித்தால் எந்தப் பிரச்னையும் இன்றி கரோனாவைக் கட்டுப்படுத்தலாம்' என்று கூறினார்.

இதையும் படிங்க: தனியார் பள்ளி ஆசிரியரின் சேட்டைகள் - போர்க்கொடி தூக்கிய முன்னாள் மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.