கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில் கன்னியாகுமரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம், சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடகச் சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில் கன்னியாகுமரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடக சங்கம் - திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதனை கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கிவைத்தார், இம்முகாமில் கண்புரை, மாறுகண், பிறவி கண்ணீர் அழுத்த நோய், மாலைக்கண், கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
இதில், கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கண் நோயாளிகள் கலந்துகொண்டனர்.