ETV Bharat / state

பாலியல் தொழிலில் ஈடுபட்ட நான்கு பேர் கைது - police investigation

கன்னியாகுமரி: நாகர்கோவில் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த வெளிமாநில பெண்கள் இரண்டு பேர் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

kanniyakumari
kanniyakumari
author img

By

Published : Aug 19, 2020, 6:53 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள சர்குன வீதியில் சில நாள்களுக்கு முன்பு பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறை நடத்திய சோதனையில், வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உட்பட 7 பேர் கைதாகினர்.

இதன் தொடர்ச்சியாக காவல்துறை நடத்திய விசாரணையில், குமரியில் பல இடங்களில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம்போல் தங்கி பாலியல் தொழிலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, நாகர்கோவிலை அடுத்த வெட்டூர்ணிமடம் பகுதியில் காவலதுறையினர் நடத்திய சோதனையில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் தரகராக செயல்பட்ட கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்த பிரதாப் குமார் (55), பூதலிங்கம் (60) ஆகியோர் கைதாகினர். தலைமறைவான வீட்டு உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: இறுதிச்சடங்கிற்கு சோகத்துடன் தயாராகும் கிராமம்; வீர மரணமடைந்த காவலர் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார் திரிபாதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.