கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகர்கோவில் அருகேயுள்ள புத்தேரி குளம் நிரம்பியதைத் தொடர்ந்து, கிராமங்களில் நீர் புகுவதைத் தடுக்கும் வகையில் குளத்தின் ஒரு கரைப் பகுதியை உடைத்து, நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் புத்தேரிப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 85 மி.மீ. மழையும், சுருளோட்டில் 83.4 மி.மீ மழையும், நாகர்கோவிலில் 32.4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இதனால் பூதப்பாண்டி, திட்டுவிளை உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள நான்கு வீடுகள் கனமழையால் சேதமடைந்துள்ளன. மேலும், தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதையும் படிங்க: ப. சிதம்பரம் ஜாமீன் மனுமீது இன்று தீர்ப்பு!