கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி, நாடார் தெருவைச் சேர்ந்தவர் சிதம்பர தாணு(43). அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பிரபு(25) என்பவர், ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், ஆரல்வாய்மொழி காவல்துறையினர் சிதம்பர தாணுவை கைது செய்தனர்.
அதிமுக நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வீல் சேரில் அமர்ந்திருக்கும் தாயுடன் சகோதரனை தேடும் சிறுமி!