ETV Bharat / state

சபரிமலையில் பக்தர்கள் வருகையால் குமரிக்கு இடம் பெயரும் காட்டுயானைகள்.. கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 12:47 PM IST

Kerala Elephants migrating to Kanyakumari: கேரள மலைப் பகுதிகளில் இருந்து ஏராளமான காட்டு யானைகள் கன்னியாகுமரி வனப்பகுதிகளில் முகாமிட்டு உள்ளதால், யானைகளை கண்காணிக்க வனத்துறையினர் சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Etv Bharat
சபரிமலையில் பக்தர்கள் வருகையால் கன்னியாகுமரிக்கு இடம்பெயரும் காட்டுயானைகள்மரிக்கு இடம்பெயரும் காட்டுயானைகள்

கன்னியாகுமரி: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் உள்ளிட்ட நான்கு திணைகளை உள்ளடக்கிய கன்னியாகுமரி மாவட்டத்தில் களியல், குலசேகரம், வேளிமலை, அழகியபாண்டிபுரம், பூதப்பாண்டி ஆகிய ஐந்து வனச்சரகங்களைக் கொண்ட மலைப்பகுதிகளில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பில் காடுகள் உள்ளன. இதில் கோதையாறு, அப்பர் கோதையாறு, மகேந்திரகிரி, அசம்பு, மாறாமலை, பாலமோர் போன்ற மலைப் பகுதிகள் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளாக கணக்கிடப்பட்டு உள்ளது.

அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் வருகையும் அதிகரிப்பதன் காரணமாக, அங்குள்ள அடர்ந்த காடுகளில் வசிக்கும் யானைகள் இடம் பெயர்ந்து கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதிகளுக்கும், திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, புளியங்குடி, செங்கோட்டை போன்ற பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளுக்கும் வருகின்றன. இதனால் இப்பகுதிகளில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

கடந்த 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக தெரிய வந்தது. சமீபத்தில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின்படி 60க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். தற்போது சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கிய நிலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர்.

இதன் காரணமாக, சபரிமலை வட்டாரப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட வனப் பகுதிக்கு வந்து உலாவுவதாக வனத்துறையினர் தரப்பில் கூறியிருந்தனர். தற்போது சபரிமலையில் வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதிகளில், கேரள மலைப் பகுதிகளில் இருந்து ஏராளமான யானைகள் இடம் பெயர்ந்து வந்து முகாமிட்டு உள்ளன.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையினர் 47 வன கிராமங்களில் குடியிருக்கும் பழங்குடியின மக்களின் பிரதிநிதிகளுக்கு, வனத்துறையினர் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், யானைகளை கண்காணிக்க வனத்துறையினர் சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் மதுபோதையில் கருங்குரங்கின் வாலைப் பிடித்து இழுத்த வாலிபர் கைது..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.