ETV Bharat / state

வெளிநாட்டு நீர்வாழ் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கன்னியாகுமரி: வெளிநாட்டு நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.

வெளிநாட்டு நீர்வாழ் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
வெளிநாட்டு நீர்வாழ் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
author img

By

Published : Jan 4, 2020, 1:13 PM IST

ஐரோப்பியா, சைபீரியா, ரஷ்யா, மங்கோலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம்வரை கடும் குளிர் ஏற்படும். இதனால் பறவைகள் அங்கு வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பறவைகள் இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களுக்கு இடம்பெயர்கின்றன. தென்மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் அதிகமான வெளிநாட்டு பறவைகள் வந்து முகாமிடுகின்றன.

அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள பிளம்பிங்கோ, ஊசிவால் வாத்து, உள்ளான் வகைகள் , சோவலர் வாத்து இனங்கள், ரெட் சேன், கிரீன் சேன் உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகளும், இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ள கூழை கடா, பல்வேறு நாரை, கொக்கு இனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளும் நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடி, சுசீந்தரம், தேரூர், சாமிதோப்பு, புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் முகாமிட்டுள்ளன.

வெளிநாட்டு நீர்வாழ் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

இந்நிலையில், நீர்நிலை பறவைகளின் கணக்கெடுக்கும் பணிகள் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளான மணக்குடி, சாமிதோப்பு, புத்தளம் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் இன்று நடைபெற்றது. இதில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், மாணவர்கள் அடங்கிய ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறன.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைந்துள்ளது எனவும் பறவைகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கடலோர மாவட்டங்களில் 4 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் வெளி நாட்டு நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி இன்றுதொடங்கியது. புத்தளம் , சுசீந்தரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனத்துறையினர் , பறவை ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகள் எண்ணிக்கை வராது குறைந்தே காணப்படுவதால் பறவை ஆர்வலர்கள் அதிர்ச்சி.Body:ஐரோப்பியா, சைபிரியா, ரஷ்யா, மங்கோலிய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கடும் குளிர் ஏற்படுவதால் பறவைகள் அங்கு வாழ முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அங்குள்ள பறவைகள் இந்தியாவில் முக்கிய இடங்களுக்கு இடம்பெயர்ந்து வந்து விடுவது வழக்கம்.
இந்த பறவைகள் தென்மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் வந்து முகாமிட்டு இனப்பெருக்கம் செய்வது வழக்கம்.
அந்தவகையில் வெளிநாடுகளில் உள்ள பிளம்பிங்கோ, ஊசிவால் வாத்து, உள்ளான் வகைகள் , சோவலர் வாத்து இனங்கள், ரெட் சேன், கிரீன் சேன் உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகளும், இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ள கூழை கடா, பல்வேறு நாரை மற்றும் கொக்கு இனங்கள் உள்ளிட்ட உள் நாட்டு பறவைகளும் நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடி, சுசீந்தரம், தேரூர் , சாமிதோப்பு ,புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் முகாமிட்டுள்ளது.
இந்நிலையில் நீர் நிலை பறவைகளின் கணக்கெடுக்கும் பணிகள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளான மணக்குடி, சாமிதோப்பு ,புத்தளம் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் இன்று நடைபெற்றது. இதில் வனத்துறையினர், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 7 குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை அதிகம் பெய்ததால் குளம் மற்றும் குட்டைகளில் அதிக அளவில் நீர் தேங்கி உள்ளதாலும், இயற்கை தட்பவெப்பநிலையில் மாற்றம் ஏற்ப்பட்டு உள்ளதாலும் இந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைந்து உள்ளது என பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் பறவைகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Conclusion:1, பேட்டி: மாவட்ட வன அலுவலர் ஆனந்த்.

2, பேட்டி: பறவைகள் ஆராய்ச்சியாளர் மற்றும் ஆர்வலர் டேவிட்சன்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.