இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் ஈரான் நாட்டில் தங்கி மீன்பிடித்து வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மீனவர்கள் பலர் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். எனினும் தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 850-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் தீவு போன்ற பகுதிகளில் உள்ளனர். இவர்கள் சொந்த ஊர் செல்ல விமானம் இல்லாததால் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அங்கு வாழ்ந்துவருகின்றனர்.
இவர்களை மீன்பிடிக்கச் செல்ல அரபி முதலாளிகள் வற்புறுத்திவருவதாகவும், மூன்று வேளைக்குப் பதில் ஒரு வேளை உணவை மட்டுமே உண்டு நாள்களை எண்ணி வருவதாகவும் வாட்ஸ்அப் செயலி மூலம் காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
எனவே உடனே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தங்களை சொந்த ஊர் அழைத்துச் செல்ல வேண்டும் என வேதனையுடன் வாட்ஸ்அப் தகவல்களை சொந்த ஊரில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர்.