மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதிலுமிருந்தும் ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் முன்பு டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மீனவ மக்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு திருத்தல அதிபர் ஆன்டனி அல்காந்தர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், துண்டு பதாகைகளை ஏந்தியபடி விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி