ETV Bharat / state

மீன்பிடித் துறைமுகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் - நடந்தது என்ன?

குமரி: குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் வரத்து குறைவாலும், மீன்களின் விலை வழக்கத்தை விட அதிகமாக விற்றதாலும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

fisheries-hike-in-fishing-harbor
fisheries-hike-in-fishing-harbor
author img

By

Published : May 28, 2020, 4:59 AM IST

குமரி மாவட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் குளச்சல், முட்டம் மீன்பிடித் துறைமுகங்களை தங்கு தளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் 2000-க்கும் மேற்பட்ட கட்டுமரம், வல்லம் மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 15 நாட்களுக்கு முன் கட்டுமரம், வல்லம் மீனவர்கள் மட்டும், மீன்பிடிக்கச் செல்ல அரசு அனுமதி அளித்தது. எனினும், கடந்த ஒரு வாரமாக பெரிய அளவில் மீன் வரத்தின்றியே காணப்பட்டது. இந்நிலையில் குளச்சலைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கட்டுமரம், வல்லம் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று மீண்டும் குறைந்த அளவிலான மீன்களுடனே கரை திரும்பினர்.

ஆனால், மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் குவிந்ததால், மீன்களின் விலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் ஒரு குட்டை ரூபாய் 2000-க்கும், சாளை ரூபாய் 4200-க்கும், அயலை ஒன்று ரூபாய் 80-க்கும், விளாமீன் ஒன்று ரூ.100-க்கும் விலை போனது. கடும் விலை உயர்வு காரணமாக வியாபாரிகள் பொதுமக்கள் கடும் ஏமாற்றமடைந்தனர்.

இதையும் படிங்க:மாமரங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்: விவசாயிகள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.