கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மலையோர பகுதிகளில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேலும், கடலோர பகுதிகளில் சூறைக்காற்றுடன் கடல் சீற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் தகவல் சேவை மையம் கன்னியாகுமரி மீனவர்கள், மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், நான்காவது நாளான இன்றும் கடல்சீற்றம் குறையாததால் ஆழ்கடலில் மீன்பிடி தொழில் செய்து வந்த மீனவர்களும் இன்று கரை திரும்பினர். குமரி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் அனைத்தும் வரிசையாக நிறுத்தப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
தொடர்ந்து நான்கு நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாததால் மீன்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு மீன் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.