கன்னியாகுமரி: வடசேரி அரசு பேருந்து நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பில் தீபாவளி வருவதை முன்னிட்டு கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழ்நாடு தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்படி மாநிலம் முழுவதும் தீயணைப்பு துறை சார்பில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் தீயணைப்புத்துறையினர் இன்று (அக்.16) கரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.
பேருந்து நிலையத்தில் அவர்கள் கைகளில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கரோனா வந்தால் என்ன செய்ய வேண்டும், அதனை வராமல் தடுப்பது எப்படி போன்ற விளக்கங்களை பொதுமக்களுக்கு அளித்தனர்.
இதையும் படிங்க: மாஸ்க், ஹெல்மெட் போடலனா எமலோகம் தான்... காவல் துறையின் வித்தியாச விழிப்புணர்வு