கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே புத்தேரி குளக்கரையின் கீழ்ப்பகுதியில் பராசக்தி கோயில் உள்ளது. இங்குள்ள பராசக்தி கோயிலில் புலி ஒன்று சுவர் தாண்டிக் குதித்து, கோயில் வளாகத்தினுள் ஓடியதைப் பார்த்ததாக அந்தக் கோயில் பூசாரி கூறினார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். மேலும், ஆள் நடமாட்டம் இல்லாமல் புதர் மண்டிக்கிடக்கும் பகுதியிலும், புலி பதுங்கி இருக்கிறதா என்பது குறித்தும் சோதனை நடத்தினர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புலிகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். கிராமத்தில் புலி நடமாட்டம் இருப்பதாகத் தகவல் பரவியதால், இப்பகுதி கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: பொதுமக்கள் தண்ணீர் தொட்டியில் குடிநீர் பிடிக்க சூயெஸ் நிறுவனம் எதிர்ப்பு