ETV Bharat / state

ஸ்டிக்கர் ஒட்டினால்தான் எஃப்.சி., தனியார் நிறுவனங்கள் மோசடி: ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் புகார் - வட்டார போக்குவரத்து அலுவலகம்

கன்னியாகுமரி: தனியார் நிறுவனங்களின் ஒளிபிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டினால்தான் எஃப்.சி. வழங்கப்படும் என்ற நிர்பந்தத்தைக் கைவிடக்கோரியும், மோசடியில் ஈடுபட்டுவரும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஸ்டிக்கர் ஒட்டினால் தான் எப்சி: கொள்ளை அடிக்கும் தனியார் நிறுவனங்கள்

author img

By

Published : Sep 11, 2020, 9:21 AM IST

மோட்டார் வாகன சட்டத்திருத்தம் என்ற பெயரில் ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்களுக்கு பல இன்னல்களை மத்திய அரசு கொடுத்துவருவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதில், ஒன்றாக தனியார் நிறுவனங்கள் (3 M இந்தியா மற்றும் ஏவரி டென்னீசன்) தரும் ஒளிபிரதிபலிப்பான் ஸ்டிக்கரை ஆட்டோவின் முன்பகுதியில் சில்வர், பின்புறம் சிகப்பு, பக்கவாட்டில் மஞ்சள் நிறம் என்ற அடிப்படையில் ஒட்டி பிரத்யேகமான செயலி மூலமாகப் படம் எடுத்து அனுப்பினால்தான் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் எஃப்.சி. பார்க்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், தனியார் நிறுவனங்கள் நாடு முழுவதும் முகவர்களை நியமித்து ஸ்டிக்கர் ஒட்டிவருகின்றனர். இதற்கு 450 முதல் 1000 ரூபாய் வரை கட்டாய வசூல்செய்யப்படுகிறது.

இதே ஸ்டிக்கரை வெளியில் ஒட்டினால் 150 ரூபாய் முதல் 200 வரை மட்டுமே செலவாகும். கரோனா காலத்தில் வறுமையில் வாடிவரும் ஆட்டோ தொழிலாளர்களிடம் இவ்வாறு கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்துசெய்வதோடு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலமாக நேரடியாக ஸ்டிக்கர்களை ஆட்டோ தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், மோசடியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குமரி மாவட்டம் பண்டாரபுரம் பகுதியில் அமைந்துள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பாக அதன் நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர் .

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.