கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் கோட்டாரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் அதே பள்ளியில் தனது மகனை 11ஆம் வகுப்பில் சேர்பதற்கு சீட் கேட்டு சில தினங்களுக்கு முன்பு நாகராஜன் பள்ளிக்குச் சென்றார்.
அப்போது, நாகராஜனுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளி நிர்வாகிகள் தன்னை கடுமையாக தாக்கியதாக நாகராஜன் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார்.
ஆனால், காவல் துறையினர் விசாரணை செய்யாமல் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நாகராஜன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த உறவினர்கள் அவரை காப்பாற்றி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து கோட்டார் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: காட்டுப்பன்றி இறைச்சி சமைத்த 3 பேருக்கு அபராதம்