கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும், இந்து மதத்தையும் இழிவுப்படுத்தி அவதூறாக பேசிய வழக்கில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், பாதிரியார் பொன்னையா மதுரை கள்ளிக்குடியில் கைது செய்யப்பட்டார். இதன்பின்னர், கள்ளிக்குடி காவல் துறையினர் பொன்னையாவை கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.