ETV Bharat / state

நேசமணி நினைவு தினம்: ஆட்சியர் மரியாதை

author img

By

Published : Jun 1, 2019, 1:58 PM IST

கன்னியாகுமரி: மார்ஷல் நேசமணியின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நேசமணி

நேசமணி இந்திய சுதந்திரத்திற்கு முன் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1895ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி பிறந்தார். இவரது தாயார் குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக பல போரட்டங்களை நடத்தினார். பின் தனது தாய் வழியை பின்பற்றி வந்த நேசமணியும் பல்வேறு போரட்டங்களை நடத்தினார்.

இதன் பலனாக குமரி மாவட்டம் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டுடன் இணைந்தது. இதன் காரணமாக இவர் குமரி மாவட்டத்தில் தந்தை என அழைக்கப்படுகிறார். பின் நாகர்கோவில் நகர்மன்ற தலைவர், எம்எல்ஏ, எம்பி உள்ளிட்ட பல்வேறு பதவிகளை நேசமணி வகித்து வந்த இவர் 1968ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி மரணமடைந்தார்.

இந்நிலையில் இன்று நேசமணியின் 51ஆவது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணியின் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ரேவதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்ட தந்தை என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணியின் 51 ஆவது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Body:இந்திய சுதந்திரத்திற்கு முன் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1895-ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி பிறந்தவர் நேசமணி. இவர் தாய் தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைவதற்காக பல போராட்டங்களை நடத்தியவர்.
மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்ட இவர் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. இதன் காரணமாக இவர் குமரி மாவட்டத்தில் தந்தை என அழைக்கப்படுகிறார்.
இவர் நாகர்கோவில் நகர்மன்ற தலைவர், எம்எல்ஏ, எம்பி உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். பின்னர் 1968ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி இறந்தார்.
இந்நிலையில் இன்று அவரது 51வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணியின் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ரேவதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.