ETV Bharat / state

கரோனா காலகட்டத்தில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தடையின்றி மேற்கொள்ளப்பட்டனவா? ஒரு கள ஆய்வு - குடும்பக் கட்டுப்பாடு

கன்னியாகுமரி: கரோனா பாதிப்பு காலகட்டத்திலும் 400 பேருக்கும் மேல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, அம்மாவட்ட மருத்துவக்குழு சாதனைப் படைத்துள்ளது. குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை கரோனா காலத்திலும் எவ்வாறு சாத்தியமானது என்பதை விவரிக்கிறது, இந்த கள ஆய்வுக் கட்டுரை...

கரோனா காலகட்டத்தில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தடையின்றி மேற்கொள்ளப்பட்டனவா? ஒரு கள ஆய்வு

author img

By

Published : Nov 26, 2020, 8:12 PM IST

Updated : Dec 1, 2020, 6:29 AM IST

1987ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 500 கோடியைத் தாண்டியது. இதைத்தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதியை, 'உலக மக்கள் தொகை தினமாக' ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதனால், ஆண்டுதோறும் உலக மக்கள் தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஜூலை 11ஆம் தேதி, உலக மக்கள் தொகை தினமாகத் தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்திய அரசு 1952ஆம் ஆண்டு குடும்ப நல திட்டத்தை ஒரு தேசிய திட்டமாக அறிவித்தது. இந்திய மக்கள்தொகை 2000-ஆம் ஆவது ஆண்டில் 100 கோடியைத் தாண்டியது. உலக மக்கள் தொகையில் ஆறு பேரில் ஒருவர், இந்தியர் என்ற நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் வகுக்கப்பட்டு, நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன.

அதன்படி, குமரி மாவட்டத்தில் மக்கள் தொகையை நிலைப்படுத்த 'குடும்ப சுகாதார திருவிழா' 14 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் குடும்ப நல ஆலோசனை மற்றும் கருத்தடை சிகிச்சை முகாம்கள் நடைபெறும். அதேபோல பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக குடும்பக் கட்டுப்பாடு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுவது உண்டு.

பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் மத்தியில் குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேச்சுப்போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த கரோனா காலகட்டத்திலும், குமரி மாவட்டத்தில் எந்தவித தடையுமின்றி, குடும்பக் கட்டுப்பாடுகள் நடந்துள்ளது. அதிலும், குறிப்பாக கரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்குக்கூட தகுந்த பாதுகாப்புடன் 'குடும்பக் கட்டுப்பாடு' செய்து சாதனைப் படைத்துள்ளனர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள்.

இதுகுறித்து குமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ் கூறியதாவது: 'குமரி மாவட்டத்தில் கரோனா காலகட்டத்திலும் மகப்பேறு சிகிச்சை எந்தவித தடையுமின்றி நடைபெற்றது. குடும்பக் கட்டுப்பாடு, இரண்டு விதமாக செய்யப்படுகிறது. ஒன்று நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, மற்றொன்று தற்காலிக குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை.

கரோனா பாசிட்டிவாக இருந்து, இங்கு பிரசவம் பார்த்த 15 தாய்மார்களுக்கு தற்காலிக குடும்பக் கட்டுப்பாடு செய்யும் வகையில், காப்பர் - T பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 42 பேருக்கு நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மகப்பேறு மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு இருந்ததால், அவர்களும் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி, இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இதுபோல், கரோனா அல்லாத 400க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கும் குழந்தை பெற்ற பிறகு, குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எந்தவித பாதிப்பும் இன்றி கர்ப்பிணிகளுக்கு பிரசவம் முடிந்த பிறகு, தொடர்ச்சியாக குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் நடந்து வருகிறது. இந்த கரோனா காலகட்டத்தில் சராசரியாக மாதம் 70 பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது' என்றார்.

கர்ப்பிணிகள் நோய்த்தொற்று ஏற்பட்டால், அவர்கள் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும், எவ்வாறு குடும்பக்கட்டுப்பாடுக்கு தயாராக வேண்டும் என்று அரசு மருத்துவமனை மகப்பேறு நிபுணர் டாக்டர் உதயபானு கூறியதாவது: 'குமரி மாவட்டத்தில், கர்ப்பிணிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு சிறப்புக் கவனம் கொடுத்து கவனித்து வருகிறோம். கர்ப்பிணிகளுக்கு இயற்கையிலேயே அதிக எதிர்ப்புச் சக்தி இருப்பதால், கரோனாவால் பெரிய அளவு பாதிப்பு, அவர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

கரோனா காலகட்டத்தில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தடையின்றி மேற்கொள்ளப்பட்டனவா? ஒரு கள ஆய்வு

அதேபோல் பிறக்கப்போகும் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற கவலையும் அவர்களுக்கு வேண்டாம். முறையான உணவு, மருத்துவரின் ஆலோசனை போன்றவை இருந்தால், இந்த நோயில் இருந்து எளிதாக மீளலாம். அதேபோல, குமரி மாவட்டத்தில் இதுவரை எந்த கர்ப்பிணியும் கரோனா நோய்த் தொற்றினால் இறக்கவில்லை. கர்ப்பிணிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுப் பின்னர், அதிலிருந்து மீண்டாலும் குழந்தை பிறந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா என்ற சந்தேகம் வரும். உடலை சுத்தமாக வைத்துக் கொண்டு, தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம் அதனால் பாதிப்பு ஏற்படாது. கரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் கரோனா அல்லாத கர்ப்பிணிகள் நிறைய பேருக்கு குழந்தைபெற்றபிறகு, குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் மனதளவில் ஆண், பெண் இருவருமே குடும்பக்கட்டுப்பாடுக்கு தயார் நிலையில் இருந்தாலே, குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளலாம்' என்று கூறினார்.

இதையும் படிங்க: புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவின் தற்போதைய நிலை என்ன? கள ஆய்வு

Last Updated : Dec 1, 2020, 6:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.