கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகேயுள்ள குறக்குடியைச் சேர்ந்தவர் பாபு(28). இவர் ஓமன் நாட்டில் சலாலா பகுதியில் ஐந்து ஆண்டுகளாக ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்துவந்தார். இந்நிலையில் கடந்த வாரம் தொலைபேசி வாயிலாக பேசிய பாபு, தனது தாயிடம் ஒரு மாதத்தில் வீட்டிற்கு வர உள்ளதாகவும், சம்பள பணத்திற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், நேற்று இரவு பாபுவுடன் வேலை செய்யும் மற்றொரு நபரான அருள் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாபு அடித்து கொலை செய்யப்பட்டதையும், அவரின் உடல் தற்போது சலாலா மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளதையும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாபுவின் உறவினர்கள், உடலை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதுடன் அவரது மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.