ETV Bharat / state

"மோடியின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார் மு.க.ஸ்டாலின்" - அதிமுக ஜெயக்குமார் சாடல்! - ADMK FORMER MINISTER JAYAKUMAR

மத்தியில் பாசிச ஆட்சி நடத்திவரும் பிரதமர் மோடியை, தமிழகத்தில் பாசிச ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் நேரில் சந்தித்துவிட்டு வந்தது முதல் அவரது செல்ல பிள்ளையாகவே மாறிவிட்டார்‌ என அதிமுக ஜெயக்குமார விமர்சித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின், ஜெயக்குமார்
மு.க.ஸ்டாலின், ஜெயக்குமார் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2024, 3:55 PM IST

சென்னை: முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதியின்படி முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பாக எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று (நவ.16) பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 திருமுருகன் காந்தி, அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேடையில் பேசியதாவது, “மத்தியில் பாசிச ஆட்சி நடத்தி வரும் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருவகிறது. பிரதமர் மோடியை, தமிழகத்தில் பாசிச ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் சந்தித்து விட்டு வந்த நாள் முதல் அவரது செல்ல பிள்ளையாக மாறிவிட்டார்‌.

இந்திய அளவில் இஸ்லாமிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவது குறித்து இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட குரல் கொடுக்காதது ஏன்? இரட்டை வேடம் போடும் கட்சி திமுக, அதன் தலைவர் ஸ்டாலின். 2006ல் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது இஸ்லாமியர்களுக்கான 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு பரிந்துரைக்கப்பட்டது. அதற்கடுத்த ஆட்சிக்கு வந்த திமுக அதனை நடைமுறைப்படுத்தியது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மேடையில் பேசியதாவது, “சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவதில்லை என்று சமூக நீதி அரசு சொல்லலாமா? சமூக நீதி அரசு, திராவிட முன்னேற்றக் கழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மறுக்கிறது. சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகத்தின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீட்டை வழங்குங்கள். நீண்ட நாட்களாக சிறையில் இருக்கக்கூடிய இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யுங்கள்” என்றார்.

பின்னர், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியாவின் பேசியதாவது, “சமுதாயம் என்பது அனைவரும் சேர்ந்து வாழ்வது. இஸ்லாமிய இளைஞர்களின் மேம்பாட்டிற்கு துணை முதலமைச்சர் உதயநிதிக்கு கவலை இருப்பதில்லையா? இட ஒதுக்கீடு திமுக ஆட்சியில் குடும்பத்திற்கான ஒதுக்கீடாக மாறி விட்டது. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பதவிகள் மற்றும் சொத்துக்களை குவிப்பதற்காகவே ஆட்சிக்கு வந்தீர்களா?

பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் இருக்கும் இஸ்லாமிய சமூகத்தை திமுக அரசு காணவில்லை.தேர்தல் வரும்போது மட்டுமே மக்கள் உங்கள் கண்ணுக்கு தெரிகிறார்களா? தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த பிறகு, அனைத்து வாக்குறுதிகளையும் மறந்துவிட்டீர்களா? நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றி விட்டீர்களா? அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் உங்கள் பொய் வாக்குறுதிகளை உணர்ந்துவிட்டார்கள்” என்றார்.

அதனைத்தொடர்ந்து, திருமுருகன் காந்தி மேடையில் பேசியதாவது, “இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதி நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நிலவுகின்றன.மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் செயல்படும் பாரதிய ஜனதா கட்சி, இஸ்லாமியர்களை எதிர்த்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. பாசிச அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு முன்னணியில் இருந்து குரல் கொடுக்க வேண்டும்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திமுக உள்லது. கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இஸ்லாமியர்களை நிராகரிக்கும் ஆர்எஸ்எஸ், பாஜக அணுகுமுறைக்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: "தேர்வுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி" - அமைச்சர் அன்பில் மகேஸ் புகழாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.