ETV Bharat / state

சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்த 'போலி' போலீஸுக்கு தர்ம அடி!

கன்னியாகுமரி: சுற்றுலா தளங்களுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம், நகைகளை பறித்துவந்த போலி உதவி ஆய்வாளரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், அவரை சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

fake police
author img

By

Published : Apr 30, 2019, 11:06 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கடற்கரை, கோவளம் கடற்கரை, காந்தி மண்டபம், திரிவேணி சங்கமம் போன்ற சுற்றுலா கடற்கரை பகுதிகளில் காலை மாலை நேரங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இந்நிலையில், இன்று சொத்தவிளை கடற்கரைக்கு வந்த வெளியூர் சுற்றுலா தம்பதியரிடம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த சுதன்(30) என்ற இளைஞன், தான் உதவி காவல் ஆய்வாளர் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர்களிடம் பணம் கேட்டதோடு, தரவில்லை என்றால் காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு போட்டு விடுவதாகவும் மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளார். இதைப்போல் இருசக்கர வாகனத்தில் வந்த திருப்பதி சாரம் பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற உள்ளூர் சுற்றுலா பயணியையும் மிரட்டியதோடு அவரின் கைப்பையையும் பறித்துள்ளார்.

இதைக்கண்ட உள்ளூர் பொது மக்கள் சந்தேகம் அடைந்து அவரைப் பிடித்து அடித்து விசாரித்ததில் அவர் போலி காவல் ஆய்வாளர் என தெரிய வந்தது. பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து சுசீந்தரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, அந்த நபரைக் கைது செய்ததோடு அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த சுசீந்திரம் போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.

TN_KNK_01_29_FAKE_KANYAKUMARI CID_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி குமரி சுற்றுலா தளங்களுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் நகைகளை பறித்த போலி உதவி ஆய்வாளரை பொதுமக்கள் பிடித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு. சுசீந்திரம் போலிஸார் விசாரனை. கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கடற்கரை கோவளம் கடற்கரை காந்தி மண்டபம் திரிவேணி சங்கமம் போன்ற சுற்றுலா கடற்கரை பகுதிகளில் காலை மாலை நேரங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இந்நிலையில் இன்று சொத்தவிளை கடற்கரைக்கு வந்த வெளியூர் சுற்றுலா தம்பதியரிடம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த சுதன்( 30) என்ற இளைஞன் தான் உதவி காவல் ஆய்வாளர் என்று கூறி பணம் கேட்டதோடு தரவில்லை என்றால் காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு போட்டு விடுவதாகவும் கூறி மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளார் . இதைப்போல் இருசக்கர வாகனத்தில் வந்த திருப்பதி சாரம் பகுதியை சேர்ந்த அஜித் என்ற உள்ளூர் சுற்றுலா பயணியையும் மிரட்டியதோடு அவரின் கைபையையும் பறித்துள்ளார் போலி உதவி ஆய்வாளர். இதை கண்ட உள்ளூர் பொது மக்கள் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து அடித்து விசாரித்ததில் அவர் போலி காவல் ஆய்வாளர் என தெரிய வந்ததை அடுத்து தர்ம அடி கொடுத்து சுசீந்தரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். போலி உதவி காவல் ஆம்வாளரை கைது செய்ததோடு அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து சுசீந்திரம் போலிஸார் தீவிர விசாரனை மேற் கொண்டு வருகிறார்கள். விஷுவல் - சுசீந்திரம் காவ நிலையம். போலி உதவி காவல் ஆய்வாளர் புகைப்படம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.