மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கி அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாஜக சார்பில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலிருந்து வடக்குதாமரைகுளம், சாமிதோப்பு, தென்தாமரைகுளம் வழியாக கொட்டாரம் வரை இருசக்கர வாகனப் பேரணி நடத்த முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி, அகஸ்தீஸ்வரம் பாஜக தெற்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் பேரணியாகச் செல்ல முயன்றனர். ஆனால் இந்தப் பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், தடையைமீறி முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் செல்ல முயன்றனர்.
அப்போது, காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அவர்கள் பேரணி செல்வதில் உறுதியாக இருந்தனர். இதனால், முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்' - பொன்.ராதாகிருஷ்ணன்