ETV Bharat / state

சிறையில் அடைக்கப்பட்ட நாஞ்சில் முருகேசன்! - நாஞ்சில் முருகேசன் பாலியல் வழக்கு

நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் இன்று (ஆகஸ்ட் 5) நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாஞ்சில் முருகேசன்
நாஞ்சில் முருகேசன்
author img

By

Published : Aug 5, 2020, 7:19 PM IST

கன்னியாகுமரி: பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு மருத்துவமையில் சிகிச்சைப் பெற்றுவந்த நாஞ்சில் முருகேசன் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி 20 வயது காதலனுடன் திருமணம் செய்ய திட்டமிட்டு தலைமறைவாகினார். அவர்களை கோட்டார் காவல் துறையினர் மீட்டு, இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.

சிறுமியை விசாரணை செய்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அலுவலர்களிடம் பேசிய சிறுமி, தன் தாயார் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாஞ்சில் முருகேசனிடம் தன்னை அழைத்துச் சென்றதாகவும், அங்கு தனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாகவும் சிறுமி வாக்குமூலம் அளித்தார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது பாய்ந்த போக்சோ

அதேபோன்று நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மேலும் சிலர் பாலியல் தொல்லை அளித்து துன்புறுத்தியதாகவும் சிறுமி வாக்குமூலம் அளித்தார். இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி, நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாஞ்சில் முருகேசன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் நாஞ்சில் முருகேசன் யாருக்கும் தெரியாமல் தலைமறைவானார்.

இதற்கிடையில் சிறுமியின் தாயார், நாகர்கோவில் குளத்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலு (66), கோட்டார் கம்பளத்தை சேர்ந்த அசோக்குமார் (43) , உறவினர் கார்த்திக் (23) ஆகிய 4 பேரையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இச்சூழலில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் உதவியுடன் திருநெல்வேலி, கடைகுளம் பகுதியிலுள்ள மருத்துவரின் காட்டு விடுதியில் பதுங்கி இருந்த நாஞ்சில் முருகேசனை தனிப்படையினர் கைதுசெய்து நாகர்கோவிலுக்கு அழைத்துவந்தனர்.

சிறுமி பாலியல் வழக்கு: தலைமைறைவான அதிமுக முன்னாள் எம்எல்ஏ கைதானது எப்படி?

நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட பின்பு, மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம் குறைவானதால் நெச்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 6 நாட்களாக சிகிச்சையில் இருந்தார்.

இவ்வேளையில், இன்று நாஞ்சில் முருகேசனின் உடல்நிலை சரியானதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியதால், அவரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு நாகர்கோவில் சிறையிலடைத்தனர். ஏற்கனவே இவ்வழக்கில் சிறுமியின் தாய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.