கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மண்டல போக்குவரத்து கழக நிர்வாகத்தைக் கண்டித்து கன்னியாகுமரி பணி மனை முன்பு அதன் தொழிலாளர்கள் வாயிற்கூட்டம் நடத்தினர்.
அதில் கன்னியாகுமரி பேருந்து நிலையத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும், போக்குவரத்து கழக ஊழியர்களை இடமாற்றம் செய்யும் நிர்வாகத்தை கண்டித்தும், போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும், தொழிலாளர்களுக்கு சுகாதாரமான கழிப்பிடம், குடிநீர், ஓய்வறை போன்றவை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி கன்னியாகுமரி போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த கண்டன வாயிற்கூட்டத்திற்கு மண்டல தொமுச பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ தலைமை தாங்கினார்.
இதையும் படிங்க: ஜனவரியில் மட்டும் டிக்கெட் இல்லாமல் பயணித்த 4,086 பேரிடம் ரூ.18 லட்சம் வசூல்