ETV Bharat / state

மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு - கன்னியாகுமரியில் நடந்த சோகம்! - Three boys died in Kanyakumari due to electric shock

கன்னியாகுமரி: பேச்சிப்பாறை அருகே உள்ள கிராமத்தில் மின்சாரம் தடைபட்டதால் இளைஞர்கள் மூன்று பேர் மின் மாற்றியில் கம்பால் தட்டியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.

Electric shock three boys dead
author img

By

Published : Oct 29, 2019, 11:43 AM IST

Updated : Oct 29, 2019, 12:43 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள குற்றியார் மலைகிராமத்தில், நேற்றிரவு மின்சாரம் தடைபட்டது. இதனால் கிராமத்து இளைஞர்கள் அந்தப் பகுதிக்கு மின்சாரம் வழங்கும் பேச்சிபாறையை அடுத்த ஸீரோபாயிண்ட் (Zero Point) பகுதிக்குச் சென்று அங்குள்ள மின் மாற்றியில் கம்பால் தட்டி தங்கள் கிராமத்திற்கு மின்சார இணைப்பு கிடைக்க முயற்சி செய்துள்ளனர்.

மழைக்காலம் என்பதால் கம்பு ஈரமாக இருந்துள்ளது. அதனைக் கவனிக்காமல் இளைஞர்கள் தட்டவே, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சஜின் சலோ, சுபாஷ், மன்மதன் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

பேச்சிப்பாறை காவல்நிலையத்தினர் பலியானவர்களின் உடல்களை உடற்கூறாய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: கெட்ட வார்த்தை பேசியதைத் தட்டிக்கேட்ட திமுக பிரதிநிதி உள்பட 4 பேரை வெட்டிய கஞ்சா கும்பல்!

Intro:கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மின்சாரம் தாக்கி மூன்று வாலிபர்கள் உயிரிழப்பு. Body:tn_knk_01_power_youth_deth_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மின்சாரம் தாக்கி மூன்று வாலிபர்கள் உயிரிழப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள மலைகிராமம் குற்றியார் இந்த கிராமத்தில் நேற்று இரவு மின்சாரம் தடை பட்டதால், இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் இந்த பகுதிக்கு மின்சாரம் வழங்கும் பேச்சிபாறையை அடுத்த சீரோபயின்ட் பகுதிக்கு வந்து அங்கு உள்ள மின் மாற்றியில் காய்ந்த கம்பால் தட்டி தங்கள் கிராமத்திற்கு மின்சாரம் வர முயற்சி செய்து உள்ளனர் அப்போது மின்சாரம் பாய்ந்ததில் குற்றியார் பகுதியை சேர்ந்த சஜின் சலோ வயது 22, சுபாஷ் வயது 20, மன்மதன் வயது 25 ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இது குறித்து பேச்சிப்பாறை போலீஸ் விசாரணை நடத்தி பலியானவர்களின் உடலை உடல் கூறு ஆய்விற்கு குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
Last Updated : Oct 29, 2019, 12:43 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.