கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரிலிருந்து புறப்பட்ட இந்த பேரணியை குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத், வருவாய் அலுவலர் ரேவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரிலிருந்து புறப்பட்ட இந்த பேரணி மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு, மீனாட்சிபுரம் பேருந்து நிலையம், செட்டிகுளம் சந்திப்பு வழியாக மீண்டும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தது. இந்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியில் மாவட்ட உதவி ஆட்சியர்களான ப்ரிதிக் தயாள் மற்றும் விஷ்ணு சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கி முன்னே சென்றனர். அவர்களைப் பின் தொடர்ந்து, மற்றவர்கள் இரு சக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர்.