கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாவட்டத்தில் மக்கள் ஜாதி மத பேதமின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றும் கிராமப்புற மக்களிடையே கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் எனவும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மாரத்தான் ஓட்டத்தின் தொடக்கமாக சமாதானப் புறாக்களை அருட்பணியாளர்கள் வானில் பறக்க விட்டனர். குளச்சலில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை மணவாளக்குறிச்சி காவல் ஆய்வாளர் தங்கராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், குமரி, நெல்லை தூத்துக்குடி மற்றும் கேரளாவைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க...நீலகிரி அருகே பாரம்பரிய உடை அணிந்து பழங்குடியினர் வேட்பு மனு தாக்கல்!