கன்னியாகுமரி: சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடி தடைகாலம் முடிந்து இந்த மாதம் தான் மீண்டும் மீன் பிடிக்க சென்றனர். தடைகாலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவில் மீன்கள் கிடைக்கவில்லை என மீனவர்கள் தரப்பில் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் சின்ன முட்டம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல அதிகாலை கடலுக்கு சென்ற சுமார் 300 விசைப்படகுகள் கரைதிரும்பி வருகின்றனர்.
குமரி கடல் பகுதியில் சுமார் 9 கடல் மைல் தொலைவில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். மேலும் கடலில் இயல்பு நிலை திரும்பிய பின்புதான் இனி மீன் பிடிக்க செல்ல முடியும் என மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரயில் போக்குவரத்தை திறம்பட கையாளும் கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள்