குமரி கேரள எல்லை சோதனைச் சாவடியில் காவல் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம் குமரி மாவட்டம் வந்த தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, காவல் துறை உயர் அலுவலர்கள் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
பின்னர் வழக்கின் நிலை குறித்தும் காவல் துறையினர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் கேட்டுத் தெரிந்துகொண்ட காவல் துறை தலைமை இயக்குநர் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட வில்சனின் வீட்டுக்குச் சென்று அவரது உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர் அங்கிருந்து புறப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த வில்சனின் உடலையை பார்த்தார்.
இதையும் படிங்க: கத்திக்குத்து... துப்பாக்கிச்சூடு - எஸ்ஐ வில்சன் உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல்