ETV Bharat / state

மகேந்திரகிரி இஸ்ரோ மைய வளாகத்தில் பறந்த ஆளில்லா விமானம்

கன்னியாகுமரி: நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மைய வளாகத்தில் ஆளில்லா விமானம் (டிரோன்) பறந்ததாக மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jul 28, 2019, 3:29 PM IST

drone

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் திரவ இயக்க அமைப்பு மையம் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி பகுதியில் அமைந்துள்ளது. இது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழி பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது. இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் இருக்கும் இப்பகுதியை மத்திய தொழில் பாதுகாப்புத் துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆளில்லாத குட்டி விமானம் (Trone camera) ஒன்று இந்த ஆய்வு மைய வளாகத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் பறந்துள்ளது. அந்த குட்டி விமானமானது ஆரல்வாய்மொழி பகுதியிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து நேற்று திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தில், நிகழ்வின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:நெல்லைமாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மைய வளாகத்தில், ஆரல்வாய்மொழி பகுதிக்கு அருகாமையில் இருந்து ஆளில்லா விமானம் (டிரோன்) பறந்ததாக பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி சார்பில் ஆரல்வாய் மொழி காவல் நிலையத்தில் புகார். போலீசார் விசாரணை. Body:tn_knk_01_central_force_complaint_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

நெல்லைமாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மைய வளாகத்தில், ஆரல்வாய்மொழி பகுதிக்கு அருகாமையில் இருந்து ஆளில்லா விமானம் (டிரோன்) பறந்ததாக பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி சார்பில் ஆரல்வாய் மொழி காவல் நிலையத்தில் புகார். போலீசார் விசாரணை.
இந்திய அரசின் விண்வெளித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திரவ இயக்க அமைப்பு மையம் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி பகுதியில் அமைந்துள்ளது. இது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழி பகுதியை ஒட்டியே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த பகுதி முழுவதையும் மத்திய தொழில் பாதுகாப்பு துறை போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆளில்லாத குட்டி விமானம்(Drone camera) பாதுகாக்கப்பட்ட பகுதியில் பறந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தில், நிகழ்வின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதிக்கு அருகாமையில் இருந்து பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஆளில்லா விமானம் பறந்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.