கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தெருவுக்கடையை சேர்ந்தவர் ஜாபர் (24). இவர் களியக்காவிளையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று (ஜுன்.17) மாலை இவர் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்துவபுரம் பகுதியில் உள்ள அபாயகரமான வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.
இதில் மருத்துவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அங்கு சென்ற களியக்காவிளை காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சபர்மதி ஆற்றில் கோவிட் வைரஸ் மாதிரிகள்!