கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை அடுத்துள்ள மூத்தார்குளம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சலவைத்தொழில் செய்து வருகின்றனர். நீண்ட காலமாக துணி துவைக்கும்போது ஓய்வெடுக்க ஒருஅறை வேண்டும் என்பது இவர்களது நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.
இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஓய்வறை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து எம்எல்ஏ ஆஸ்டின், இந்த ஓய்வறையைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமரை பாரதி, திமுக கட்சியினர், நிர்வாகிகள் உட்பட பலரும் பங்கேற்றனர்.
தங்களுடைய கோரிக்கையை ஏற்று ஓய்வறை கட்டித் தந்த எம்எல்ஏ-விற்கு சலவைத் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும் படிக்க: இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் - சலவைத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு !