கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் சார்பில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவில், "உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு நாடே கண்டனம் தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் குமரி மாவட்ட பாஜக சார்பில் இந்த கொலை வழக்கை திசைதிருப்பும் நோக்கில் மாணவியை கொலை செய்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் என்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமும் பொதுமக்கள் மத்தியில் அவதூறு பரப்புரைகளைப் பரப்பி மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பை பாஜகவினர் ஏற்படுத்திவருகின்றனர். எனவே நோட்டீஸ் ஒட்டிய சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.