ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பொருள்கள் வாங்கும் கடைகளும் அரசு கூறிய நேரத்தில் மட்டும் செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில், கன்னியாகுமரியில் அத்தியாவசிய பொருள்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்துவருகின்றனர். தினக்கூலி தொழிலாளர்கள் முதல் அரசு அலுவலர்கள் வரை அனைவரும் உணவிற்காகப் பெரும் போராட்டத்தை தினந்தோறும் சந்தித்துவருகின்றனர்.
இந்நிலையை அறிந்து கன்னியாகுமரி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின், நாகர்கோவில் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ்ராஜன் ஆகியோர் இணைந்து குமரி மாவட்டம் முழுவதும் உணவுப் பொருள்கள் வாங்க முடியாமல் தவித்துவரும் ஏழை எளியவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கிவருகின்றனர்.
இதையும் படிங்க: கோவில்பட்டி மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கிய திமுகவினர்!