திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்படி குமரி மாவட்டத்திலும் அம்மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்பழகன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்த்தூவி திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: 'நட்புக்கு இலக்கணம் பேராசிரியர்'