அய்யா வைகுண்டரின் 188ஆவது அவதார தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, மதுரை, சென்னை, கேரளாவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வருகை தந்தனர்.
அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதிக்கு வந்த அனைவருக்கும் சுவாமி தோப்பு ஊராட்சி அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் பி.சி. அன்பழகன் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எங்கெல்லாம் அய்யாவின் நிழல் தாங்கல்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் மனநிறைவு இருக்கும். எங்கு அநியாயம் நடக்கிறதோ அங்கு கடவுளின் வருகை அவசியம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்று வந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அய்யா வைகுண்டர் அவதரித்தார்.
ஆன்மீகத்தில் புரட்சியை ஏற்படுத்திய அய்யா வைகுண்டர் மக்கள் சமத்துவமாக ஒரே இடத்தில் ஒன்றாக வாழ வழிவகுத்தார்" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கமல் வரலாம்; ரஜினிதான் முதலமைச்சர்' - அர்ஜூன் சம்பத்