ETV Bharat / state

நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற கைதி உயிரிழப்பு - வேடசந்தூர் கைதி உயிரிழப்பு

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

Dindigul Investigator's Death திண்டுக்கல் கைதி உயிரிழப்பு வேடசந்தூர் கைதி உயிரிழப்பு Vedasandur Investigator's Death
Dindigul Investigator's Death
author img

By

Published : Feb 1, 2020, 1:05 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன், சவுடமுத்து. நண்பர்களான இருவரும், அடிக்கடி ஒன்று சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன் தினம் (ஜன.30) இரவு மது அருந்தும் போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.

அப்போது ஆத்திரமடைந்த பிரபாகரன், சவுடமுத்துவை கம்பியால் குத்தியுள்ளார். பின்னர், இது குறித்து எரியோடு காவல் நிலையத்தில் சவுடமுத்து புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிரபாகரனை கைது செய்து வேடசந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டுச் சென்றபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வழியிலேயே பிரபாகரன் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது சடலத்தை உடற்கூறாய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த உறவினர்கள், பிரபாகரன் உயிரிழப்புக்கு காரணமாக சவுடமுத்துவை கைது செய்யுமாறு காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் உறவினர்கள் கதறல்

இது தொடர்பாக விசாரித்த நீதிபதி, பிரபாகரனின் சடலத்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பத்திரப்படுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார். அதனடிப்படையில், பிரபாகரன் சடலம் திண்டுக்கல அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதையும் படிங்க:

பிரதமர் பத்தரை மாற்றுத் தங்கம்; அவரை சந்தேகப்படாதீங்க - ராஜ்நாத் சிங்

Intro:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நீதி மன்றத்திற்க்கு அழைத்து சென்ற கைதி உயிரிலப்பு

Body:திண்டுக்கல் 01.02.2020
எம்.பூபதி செய்தியாளர்.

வேடசந்தூர் அருகே நீதி மன்றத்திற்க்கு அழைத்து சென்ற கைதி உயிரிலப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஒத்தக்கடையைச் சேர்ந்த பிரபாகரனுக்கும் மறவப்பட்டியை சேர்ந்த சவுடன்(எ)சவடமுத்துவிற்க்கும் பணம் கொடுக்கல் வாங்கள் பிரச்சினை இருந்துள்ளது இந்நிலையில் இருவருக்கும் செல்போனில் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில் பிரபாகரன் மறவபட்டி சென்றுள்ளார் அங்கு இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில் சவுடமுத்துக்கு காயம் ஏற்ப்பட்ட நிலையில் எரியோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பெயரில் போலிசார் பிரபாகரனை காவல் நிலையத்திற்க்கு அழைத்து வந்து விசாரனைக்கு பின் கொலை முயற்ச்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு எரியோடு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் கோபால் மற்றும் திருப்பதி ஆகிய இருவரும் வேடசந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் ஆஜர் படுத்து சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் பிரபாகரன் திடீரென உயிரிலந்தார் உடனடியாக வேடசந்தூர் அரசுமருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் அங்கிருந்த உறவினர்கள் பிரபாகரன் உயிரிலப்புக்கு காரணமான சவுடமுத்து வை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வேடசந்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது பின்பு போலிசார் பேச்சு வார்த்தை நடத்தி இதைத்தொடர்ந்து இருந்த பிரபாகரனின் சடலத்தை நீதிபதி விசாரணை பிரேதத்தை பதப்படுத்தி பத்திரமாக வைக்க வேண்டும் என்பதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்Conclusion:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நீதி மன்றத்திற்க்கு அழைத்து சென்ற கைதி உயிரிலப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.